யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் யோகி பாபு மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் யோகி பாபு தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் காலடி எடுத்து வைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் போட் என்ற படத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சர்வைவல் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இதன் முதல் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் அடுத்ததாக தகிட ததிமி எனும் இரண்டாவது பாடல் நாளை (ஜூலை 19) வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.