Homeசெய்திகள்சினிமாமாஸ் காட்டும் யோகி பாபு..... வெளியானது லக்கி மேன் டீசர்!

மாஸ் காட்டும் யோகி பாபு….. வெளியானது லக்கி மேன் டீசர்!

-

நகைச்சுவை நடிகரான யோகி பாபு மண்டேலா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் வானவன், போட், தூக்குதுரை, பூமர் அங்கிள், மிஸ் மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் யோகி பாபு லக்கி மேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபுவுடன் இணைந்து வீரா, ஆர் எஸ் சிவாஜி, ரேச்சல் ரெபேக்கா ரெபேக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்த டீசரை லைக் பண்ணுங்க… ஷேர் பண்ணுங்க… கமெண்ட் பண்ணுங்க…. விவசாயம் பண்ணுங்க…. போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ