- Advertisement -
நடிகர் யோகி பாபு ஹீராவாக நடிக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
திரை உலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான யோகி பாபு தற்போது ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தூக்குதுரை, பூமர் அங்கிள், மிஸ்மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
