விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் நடிகர் யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார்.
லியோ படத்தின் வெற்றிக்கு பிறது 68-வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், ஆகாஷ், பிரேம்ஜி, மைக் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
தளபதி 68 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதல் கட்ட படப்பிடிப்பு மற்றும் முதல் பாடலுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்து மீண்டும் படக்குழு சென்னை திரும்பியது. சென்னையில் செட் அமைத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்ததாக துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர், விஜய் நடித்த யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவிலிருந்து விலகிய அவர் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.