spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதளபதி மீதான அன்பை காட்ட வாய்ப்பளித்ததற்கு நன்றி.... 'கோட்' குறித்து யுவன் வெளியிட்ட பதிவு!

தளபதி மீதான அன்பை காட்ட வாய்ப்பளித்ததற்கு நன்றி…. ‘கோட்’ குறித்து யுவன் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கோட் படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தளபதி மீதான அன்பை காட்ட வாய்ப்பளித்ததற்கு நன்றி.... 'கோட்' குறித்து யுவன் வெளியிட்ட பதிவு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி திரைக்கதை, ஆக்சன் காட்சிகள், காமெடிகள் என அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அடுத்ததாக கேப்டன் விஜயகாந்தின் கேமியோ மற்றும் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் கேமியோ போன்றவை திரையரங்கத்தை அதிர வைத்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட போன்ற பாடல்கள் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “நண்பர்களுக்கு நன்றி. ஏஜிஎஸ் நிறுவனம், அர்ச்சனா, ஐஸ்வர்யா,அகோரம் சார் ஆகியோருக்கு நம்ம தளபதி மீதான என்னுடைய அன்பை காட்டுவதற்கு இது போன்ற வாய்ப்பை தந்ததற்கு நன்றி. தளபதி விஜய் அண்ணா நிச்சயமாக வெங்கட் பிரபு அண்ணா இல்லையென்றால் இது நடந்திருக்கவே நடந்திருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ