20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி கங்கா. இவர் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த போது அவரது வீட்டிற்கு நான்கு மர்ம நபர்கள் வீடு காலியாக உள்ளதா? என்று கேட்பது போல் வந்து பேச்சு கொடுத்து மூதாட்டி கங்காவை வீட்டிற்குள் அழைத்து சென்று கை மற்றும் வாயை துணியால் கட்டி வீட்டி உள்ளனர்.

பின்னர், கழுத்து காது கை உள்ளிட்டவைகளில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 சவரன் நகைகள் 60 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்தனர்.
அப்போது அதை தடுக்க முற்பட்ட மூதாட்டி கங்காவின் கைவிரல்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. கொள்ளை சம்பவம் பற்றி வெளியில் தெரிவிக்க கூடாது என்று மிரட்டி அந்த மூதாட்டியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் சென்றுள்ளனர். மீறி தெரிவித்தால் நிர்வாணப் படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவரது மகன் வீட்டில் கட்டிப்போடப்பட்டிருந்த தாய் கங்காவை மீட்டுள்ளார். பின்னர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தக் கொள்ளை சம்பவம் அவரது மகனுக்கு வைத்த குறி என்றும் தொழில் போட்டியின் காரணமாக செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர் அவரது குடும்பத்தார்.