சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் , மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு வாடகைக்கு விட்டு உள்ளார்.
இந்த வீட்டிற்கு பாதுகாப்பு சுற்றுவர் , மற்றும் கேட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் வீட்டின் கதவின் முன்பக்கம் கிரில் கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டில் எளிதில் நுழைய முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பான வீடு அமைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மெயின் இரும்பு கேட் திறந்து இருந்த போது மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளனர். சாந்தி வீட்டின் உள்ளே இருந்து, கதவை திறந்து பின்னர் இரும்பு கிரில் கேட்டை திறந்து உள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் சாந்தியின் வாயை பொத்தி, மயக்க மருந்தை தெளித்து , கை , கால்களைக் கட்டி அவர் அணிந்து 10 சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மொத்தம் 25 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.
வீட்டின் முதல் தளத்தில் உள்ளவர்கள் சாந்தியின் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு , உள்ளே சென்று பார்த்தப் போது , சாந்தி வாயில் துணியால் கட்டப்பட்டு , கை கால்கள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சாந்தியின் கை கால் கால்களைக் கட்டுகளை அவிழ்த்து முதல் உதவி அளித்து, உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.