கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் தாலுக்காவில் விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக செவிலியர் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார் . இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதலாவது விசாரணையில் செவிலியர் ரம்யாவும் கணவர் சதீஷும் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் சதீஷ் அங்கு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் மனைவி இருவரும் முனியாண்டி புறத்தில் குடியேறி அங்கு வசித்து வந்தனர். இந்நிலையில் கணவர் சதீஷ்க்கும் ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மது அருந்துவது மற்றும் போதை மாத்திரை அருந்தும் பழக்கம் கொண்ட சதீஷ் மனைவியிடம் அடிக்கடி சண்டை போடுவார். அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதின் காரணமாக மனைவி ரம்யா உசிலம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். ரம்யா தாயார் வீட்டுக்கு சென்று கடந்த 10 நாட்களுக்குப் பின் திரும்ப வந்துள்ளார்.
தந்தை இறந்த அன்றும் தேர்வு எழுதிய மாணவி
மனைவி ரம்யா அம்மா வீட்டிலேர்ந்து திரும்ப வந்த பிறகு கணவருக்கும், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணவர் சதீஷ் கொத்தனார் வேலைக்கு பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால் ரம்யாவின் தலை உட்பட பல்வேறு இடங்களில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி ரம்யா உயிரிழந்தார்.
இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் சதீஷ்யிடம் விசாரணை செய்ததில் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சதீஷின் தாய், தந்தை இருவரும் அவரை (ரம்யாவை) விளக்கி விடுமாறு கூறியுள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சதீஷால் ரம்யா படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் ரம்யாவின் கணவர் சதீஷ் (32), மாமனார் செல்வம் (55), மாமியார் பஞ்சவர்ணம் (50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.