தாம்பரம் அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (31) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார், சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள லட்சுமி வேல்யூ ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் மூலமாக நிலம் வாங்குவதற்காக முப்பத்தி ஓரு லட்சம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கி கட்டி வந்ததாகவும், இதனால் அதிக கடன் பாரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த மாதம் திருமணம் நிச்சியக்கபட்டுள்ள நிலையில் நேற்று பெற்றோர் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்குவதற்காக சென்றுள்ளனர், இந்நிலையில் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வந்த அவரது சகோதரர் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காத்தால் ஜன்னல் வழியாக சென்று பார்த்த போது புடைவையால் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டை சோதனை செய்த போது தன் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று ஜெயந்தி கடிதம் எழுதிவைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
