spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்5 அடி உயர கோயில் உண்டியலை தட்டிதூக்கிய கும்பல்…

5 அடி உயர கோயில் உண்டியலை தட்டிதூக்கிய கும்பல்…

-

- Advertisement -

கோயில் மதிற்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று, 5 அடி உயர சில்வர் உண்டியலை 5 பேர் கொண்ட கும்பல் அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 அடி உயர கோயில் உண்டியலை தட்டிதூக்கிய கும்பல்…

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பசுபதீஸ்வரர் கோவிலில் நெடுஞ்செழியன் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி இரவு வழக்கம் போல் கோயில் மூடப்பட்டது. மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது தெற்கு பக்கம் உள்ள புவனேஸ்வரி அம்மன் சன்னதியின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 4அடி உயர சில்வர் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

we-r-hiring

புகாரின்‌பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நாகை மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ராகேஷ் (வயது 24), முரளி (25), இளையராஜா (22) பனங்குடி முரளிதரன் (26), முஷராப் (28) ஆகியோர் கோவில் உண்டியலை திருடி சென்ற தெரியவந்தது.

இதை அடுத்து ராகேஷ், முரளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மற்ற மூவர்களை தேடி வந்த நிலையில் அவர்களையும் கைது செய்தனர். பின்பு குற்றவாளிடமிருந்து உண்டியல் காணிக்கை 20 ஆயிரம் ரூபாய், மூன்று பைக், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எடுத்து குற்றவாளிகள் 5 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காரைக்கால் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதற்கிடையில் குற்றவாளிகள் 5 பேரும் கோயில் மதிற்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அஞ்சடி உயர சில்வர் உண்டியலை அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு சொன்ன அதே கதையை தான் ரஜினிக்கும் சொன்னாரா?…. தொடர்ந்து நிராகரிக்கப்படும் சுந்தர்.சி-யின் கதைகள்!

MUST READ