spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை

ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை

-

- Advertisement -

திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-24 ரவுடி. இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகரில் உடல்நிலை பாதித்த நண்பனின் தாயை பார்க்க நண்பர்களான கார்த்திகேயன் (19) மற்றும் வினோத் ஆகியோருடன் சென்றவர் மது அருந்திவிட்டு சதாசிவம் (31) என்பவர் வீட்டு வாசலில் நின்று, கணேசன் நண்பர்களுடன் சத்தமாக பேசிக்  கொண்டிருந்துள்ளார்.

ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால்  ஒருவர் வெட்டி கொலை

we-r-hiring

கணேசன் சத்தமாக பேசுவதை சதாசிவம் கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மூவரும், சதாசிவத்தை கத்தியை காட்டி மிரட்டி பைக்கில் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து சதாசிவம் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான, செல்வம் (40), வேலு (36),  பாலகிருஷ்ணன் (65), பீட்டர் (44) மற்றும் அன்பழகன்(37) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மூவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/cinema-news/actor-arjun-gave-dowry-to-daughter-aishwarya/93580

இந்நிலையில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், வெட்டுப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால்  ஒருவர் வெட்டி கொலை

தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார், கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார் கொலை நடந்து 6 மணி நேரத்திற்குள்  சதாசிவம், செல்வம், வேலு, பாலகிருஷ்ணன், அன்பழகன்,பீட்டர் மற்றும் கணேசனின் நண்பர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏழு குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ