spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தேனாகப்பேசி போலீஸ் ஏ.சி.பி, மாணவியுடன் உல்லாசம்..! திருட்டுப் போலீஸ் அதிகாரியின் தில்லாலங்கடி!

தேனாகப்பேசி போலீஸ் ஏ.சி.பி, மாணவியுடன் உல்லாசம்..! திருட்டுப் போலீஸ் அதிகாரியின் தில்லாலங்கடி!

-

- Advertisement -

கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த பிஎச்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏசிபி மொஹ்சின் கான் ஆக்ராவிலும் பணியின்போது மிகவும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்.

அவர் ஆக்ராவில் தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இங்கு தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சுற்றுப்பயணம் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றில் உதவுவது அவரது வேலையாக இருந்தது. அதை அவர் அழகாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் ஏராளம்.

we-r-hiring

தாஜ்மஹால் அருகே உள்ள கடைகள், உணவு விடுதிகள், ஓட்டல்களில் கமிஷன் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கமிஷன் தொடர்பாக கடைக்கார்களுடன் அவர் தகராறு செய்துள்ளார். இது ஆக்ராவில் விவாதப் பொருளாக மாறியது. இதனால் தாஜ்மஹால் பாதுகாப்பில் இருந்து மொஹ்சின் கான் நீக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியைச் சேர்ந்த 26 வயது இந்துப் பெண், மொஹ்சின் கான் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஐஐடி கான்பூரில் பிஎச்டி படித்தவர். கான்பூரில் பணிபுரியும் மொஹ்சின் கான், அங்கு உள்ள ஐஐடியில் சைபர் கிரைம் இன்வெஸ்டிகேஷன் மற்றும் சைபர் கிரிமினாலஜியில் பிஎச்டி பட்டத்தை 2024 ல் துறை அனுமதியுடன் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார். இங்குதான் இருவரும் சந்தித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மொஹ்சின் கான் தன்னை திருமணமாகாதவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இவர்களது நட்பு நெருங்கி, காதலாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியாக அப்பெண்ணுடன் பலமுறை உறவு கொண்டுள்ளார் இந்த போலீஸ் அதிகாரி. மொஹ்சின் கானுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனதை அறிந்ததும் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்தப் பெண்ணை சமாதனம் செய்த ஏசிபி, உடனடியாக தனது மனைவியை விவாகரத்து செய்து விடுகிறேன். உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன். நாம் தொடர்ந்து உறவில் இருக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். அதனையும் நம்பிய அந்த அபலைப்பெண் ஏசிபி பேச்சை நம்பி உடனிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்தப்பெண் ஏசிபி மீது பாலியல் வழக்கு தொடுத்துள்ளார்.

லக்னோவில் வசிக்கும் மொஹ்சின் கான், 2015 பேட்ச் பிபிஎஸ் அதிகாரி. பயிற்சிக்குப் பிறகு, அவர் 2017 ல் அலிகாரில் தனது முதல் பதவியைப் பெற்றார். இதையடுத்து அவர் ஆக்ராவில் தாஜ் செக்யூரிட்டியாக நியமிக்கப்பட்டார். ஆக்ராவில் அவர் பதவியேற்றபோது, ​​அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

 

MUST READ