spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்

-

- Advertisement -

தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Nakul, Ashwini Kumar, Pallavi Sadanand, Sameea Bangera At The Madras Couture Fashion Week Season 5 – Day 1

பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நகுல், சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் கதா நாயகனாக நடித்தார்.

we-r-hiring

இந்தத் திரைப்படத்தின் அலுவலக பணியாளராக பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குனர் ஆர் ஜி கே மற்றும் உடன் பணியாற்றிய நடிகைகள் குறித்தும் அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்திருப்பதாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக புகாரில் நகுல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சந்துரு மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொளியை நீக்க வேண்டும் என நடிகர் நகுல் தரப்பில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

MUST READ