spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-

- Advertisement -

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்டகபட்டதால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கபட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் முன்னள் முதல்வர் ஜெயலலிதா வரும் போது தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்றும் கட்டபட்டது.

we-r-hiring

அந்த பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டு உள்ளே இருந்த ஆவணங்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி போலிசார் தரப்பில் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், டி எஸ் பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜரானார்.

வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலிசார் இது வரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளதாலும் கால அவகாசம் கேட்டகபட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

MUST READ