spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

-

- Advertisement -

கரூரில் தனியாக மருந்துக் கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது – சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோவால் பரபரப்பு.மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

கரூர் – திருச்சி சாலையில் காந்திகிராமத்தில் தனியார் மருந்துக் கடை செயல்பட்டு வருகிறது. இரவு 11 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாததை  சில நாட்களாக நோட்டமிட்ட ஆசாமி ஒருவர் நேற்று இரவு மருந்துக் கடைக்கு மருந்து வாங்குவது போல் சென்றுள்ளார். இளைஞர் கேட்ட மருந்தை  கடையில் இருந்த பெண் எடுத்து வந்த போது காத்திருந்த அந்த ஆசாமி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முற்பட்டுள்ளார்.

we-r-hiring

மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியதுமருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

அப்போது, அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தங்கச் செயின் தப்பியது. செயினை பறிக்க முயன்ற ஆசாமி தப்பி ஓட்டி விட்டார். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காணாமல் போன 104 குழந்தைகளை 9 மாதங்களில் 2 பெண் போலீஸார் கண்டுபிடித்தது எப்படி?

MUST READ