கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிம் இயந்திரத்திற்கு பணம் எடுத்து சென்ற ஊழியர்கள் மீது பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி பணம் எடுத்து சென்ற கும்பல். துப்பாக்கி சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்.
கர்நாடக மாநிலம் பீதர் நகரில் உள்ள எஸ் பி ஐ வங்கி முன்பு சுமார் 10.30 மணி அளவில் ஏ டி எம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியர்கள் இருவர் காரில் பணத்தை எடுத்து வந்தனர். அப்பொழுது திடீரென துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பண பெட்டியை இறக்கிக் கொண்டிருந்த இரண்டு வங்கி ஊழியர்கள் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வங்கி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்னொரு வங்கி ஊழியர் படுகாயம் அடைந்த நிலையில் அவரை வங்கி ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருசக்கரத்தில் வந்த இருவரும் பணப்பெட்டியை திறந்து கட்டு கட்டாக பணத்தை எடுத்துச் செல்லும் நேரடி வீடியோ காட்சியை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்பு துப்பாக்கியால் வங்கி ஊழியர்களை இருவர் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை திருடி சென்றவர்களை பிடிப்பதற்காக பீதர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பிரபல ஹீரோவை அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து கத்தியால் குத்திய மர்ம நபர்கள்… திரையுலகமே அதிர்ச்சி..!