Homeசெய்திகள்க்ரைம்கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து ,...

கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து , தனிப்படை போலீஸ் விசாரணை

-

- Advertisement -

கோவையில் ஆயுதங்களால் தாக்க முயன்ற கொலை குற்றவாளிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கோவை நீதிமன்ற வளாகத்தில்  கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோகுல் உடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

we-r-hiring

இது தொடர்பாக தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள், பொதுமக்கள் எடுத்த வீடியோ ஆகியவற்றை போலீஸ்சார் ஆய்வு செய்து அதன் மூலமாக குற்றவாளிகளை கண்டறிந்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க சிட்டி போலிஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் துணை ஆணையாளர் சந்தீஸ் தலைமையிலான 8 தனிப்படைகள் களமிறங்கினர்.  குற்றவாளிகளில் ஒருவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததின் தொடர்ச்சியாக போலீசார் ஒவ்வொரு பகுதியாக குற்றவாளிகள் தங்கி இருந்த பகுதிகளை நெருங்கினர்.

நீலகிரி மாவட்ட போலீசாரின் உதவியுடன் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

கோத்தகிரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர்.

சந்தேகத்தின் பெயரில் ஏழு பேரையும் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில்  ஏழு பேரும் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஏழு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வரும்போது, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி  அருகே ஜோஸ்வா, கௌதம் ஆகிய இருவரும் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை அவசரம் என வற்புறுத்தியதால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் தப்பிக்க முயன்று ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். சாலையிலிருந்து 100 மீட்டர் தூரம் ஓடிச் சென்றபோது அங்கே புதரில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்த கௌதம் மற்றும் ஜோஸ்வா ஆகிய இருவரும் காவலர் யூசுப் என்பவரை தாக்கினர். அதில் காவலர் யூசுப்பிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தப்பிக்க முயன்றவர்களை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.  இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் கோவைக்கு அழைத்து வந்துள்ள போலீசார் ஐந்து பேரிடமும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிக்க முயலும் போது தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் யூசுப் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் துணை ஆணையாளர் சந்தீஸ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

இதனிடைய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய பாலகிருஷ்ணன், காவலர் யூசுப்பை தாக்கியதோடு எஸ். ஐ எச்சரித்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாலும், தற்காப்புக்காகவும், காவலரை தாக்குவதை தடுப்பதற்காகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பொருட்டு இடுப்புக்கு கீழ், கால் பகுதியில் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை கௌதம், ஜோஸ்வா, ஜோஸ்வாவின் சகோதரர் டேனியல், அருண்குமார், ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர், சூர்யா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தப்பிக்க முயன்றவர்கள் மீது நான்கு ரவுண்டு சுடப்பட்டதில் மூன்று ரவுண்டு தோட்டாக்கள் அவர்கள் காலில் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் பகுதியில் உலா வந்தவர்கள் ஆயுதங்களை அப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணன், கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கொலை தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில்  உள்ளதாக குறிப்பிட்ட பாலகிருஷ்ணன் பட்டப் பகலில் கொலை செய்தவர்கள்  எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர்கள் என்று தெரிவித்தார்.

 

 

 

MUST READ