மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்த வழக்கில் இருவரை பொலீசார் கைது செய்துள்ளனர். பெரியசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக நிலத்தின் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோர் பொலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்றது அம்பலமானது. நிலத்தின் உரிமையாளர்கள் இறந்து விட்டதாக போலி வாரிசு சான்றிதழ்கள் தயாரித்துள்ளனர்.
மேலும் விசாரணையில், கே.கே.நகரைச் சேர்ந்த ராகேஷ், கார்த்திக், வெங்கடேசன், வசந்த், சாலமன் ராஜ் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இவர்கள் வீடுகளில் ரகசிய அறை அமைத்து போலி ஆவணங்களை உருவாக்கி தாய் பத்திரங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை அடிப்படையாகக் கொண்டு போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வையுங்கள் – கமலஹாசன் பேட்டி


