ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை மேற்கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நிதி முறைகேடு தொடர்பாக ED அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. HCA தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் (2019-23), உப்பல் ராஜீவ் காந்தி மைதான மேம்பாட்டிற்கான நிதியில் 20 கோடி முறைகேட்டு தொடர்பாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு மொத்தம் மூன்று முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதையடுத்து இந்த விவகாரத்தில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.