Homeசெய்திகள்க்ரைம்ஜிபே மூலம் நூதன மோசடி - காவல்துறை எச்சரிக்கை

ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை

-

ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஜீபே மூலமாக நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜீபேவிற்கு பணம் அனுப்புகிறார். பின்னர் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் போட்டுள்ளதாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார்.

அதனை தொடர்ந்து பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.

எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பியிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக வாங்கி கொள்ள சொல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தற்போது தமிழகத்தில் தொடங்கி உள்ளதாகவும், அதை கவனத்தில் கொள்ளவும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் கவனத்தோடு கையாள வேண்டும் என்றும் தமிழக காவல்துறை கேட்டு கொண்டுள்ளனர்.

MUST READ