spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி 

நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி 

-

- Advertisement -

17 மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடிஆலயம் நிதி நிறுவன இயக்குனர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூ ரெய்ஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவன தலைமையிடத்தை ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேஸ்வரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர் உசேன் உட்பட 49 பேர் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர். இதன் கீழ் தொடர்ந்து தமிழக அளவில் 17 மாவட்டங்களில் நிதி நிறுவன கிளைகளையும் துவக்கினர். இங்கு முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆசிரியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களிடம் ரூ.400 கோடி வரை முதலீடாக பெற்றனர்.

we-r-hiring

ஆனால் தவணைக்காலம் முடிந்த பின்னர் இரட்டிப்பு தொகையை தராமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. பணத்தை இழந்தவர் காரைக்குடி சிக்ரி குடியிருப்பை சேர்ந்த சகாதேவன் மனைவி சந்திரா செப்டம்பர் 2022 ல் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி இந்நிறுவனத்திற்கு சொந்தமான 23 இடங்களில் சோதனை நடத்தி, அந்நிறுவன சொத்துக்களை இந்நிறுவனத்திற்கு சொந்தமான 23 இடங்களில் சோதனை நடத்தி, அந்நிறுவன சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர் இந்நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சிவகங்கையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று அறிவித்தனர்.

இதே போல ஏற்கனவே தேனி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் ஆய்வு
தேனியில் உள்ள நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனத்தில் 15 Dec 2022 ல் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டு சிலரை கைது செய்தனர் . மேலும் கிளை நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கைபற்றினர் அதனை தொடர்ந்து
நிறுவனத்தை பூட்டிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
மதுரை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்களில் பல்வேறு மாவட்டத்தில் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அந்த நிதி நிறுவனத்தில் 3 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு . செய்த வழக்கு தொடர்பாக இரண்டு நபர்கள் மதுரையிலும் கடந்த 6 மாதம் முன்பு கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகங்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்த
ஆலயம் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட அதன் இயக்குனரை நேற்று மாலை சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆலயம் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ 400 கோடி வரை பொதுமக்களிடம் வசூல் செய்து கொண்டு அந்த நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 44 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனரான காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீஸ் படையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனை மதுரையில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிவகங்கையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அழைத்து சென்றனர்.

MUST READ