spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது

தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது

-

- Advertisement -

தேனியில் தங்க பிஸ்கட் உள்ளதாக  ஜவுளி தொழில் செய்து வந்தவரின் 74 லட்சம் மோசடி செய்த ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு. பெண் உட்பட இருவர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர் (40) ஜவுளி ஏற்றுமதி மற்றும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது ஐவுளி கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி(37) என்ற பெண் நான்கு ஆண்டுகளாக மொத்த விலைக்கு ஜவுளி வாங்கி விற்பனை செய்து வந்ததில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரேவதி அவரது மகள் பூமிகாவும் திண்டுக்கல் மாவட்டம் எழுவணம்பட்டியை சேர்ந்த வீரன்(43) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வீரன் மதுரையை சேர்ந்த வெற்றிவேல் என்பரை சுந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாமல், வெற்றிவேலிடம் தங்க பிஸ்கட் இருப்பதாகவும். அந்த தங்க பிஸ்கெட் – ஐ வாங்கி நாகைபட்டினத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினால் தாங்கள் விரும்பும் டிசைன்களில் நகைகளாக செய்து தறுவார் என்று பல்வேறு நகை மாடல்களை காண்பித்துள்ளார்.

இதனை நம்பிய சுந்தர் 125 பவுனுக்கு  தங்க நகைகள் செய்ய ரேவதி, வெற்றிவேல், மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமாக பல்வேறு தேதிகளில் 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் நகைகள் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்ட தை உணர்ந்த  சுந்தர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரேவதி, அவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகிய ஐந்து நபர்கள் மீதும் கடந்த மாதம் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது முதல் குற்றவாளியான ரேவதி மற்றும் மூன்றாவது குற்றவாளியான வீரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

 

MUST READ