spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

-

- Advertisement -

தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைதுதூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில் வசிப்பவர் பொன்பாண்டி (48) பால் வியாபாரியான இவர் தனது வீடு அருகே கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். 26 ஆம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமிகள் இவரது கொட்டாயிலிருந்து  1 ஆட்டை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 20,000 ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் பொன் பாண்டி புகார் செய்தார்.

we-r-hiring

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த மணிகண்டன் (49), மேல சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆடு மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 2பேரும் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஆடுகளை திருடி, அவர்கள் வேலை பார்க்கும் இறைச்சி கடையில் விற்பனை செய்து விடுவது போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

MUST READ