spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்... 15 ஆண்டுகளாக சிக்காத உளவியல் நிபுணர்..!

‘கவுன்சிலிங்’ என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்… 15 ஆண்டுகளாக சிக்காத உளவியல் நிபுணர்..!

-

- Advertisement -

நாகரிக உலகில் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவிகள் மிரட்டி அல்லது ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 45 வயதான உளவியல் டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனை மற்றும் குடியிருப்பு வளாகத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமை செயலுக்காக கைது செய்யப்பட்டு, நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

we-r-hiring

அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹட் கேஸ்வர் போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இந்த டாக்டர் கிழக்கு நாக்பூரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.sexual abuse

அவரிடம் மாணவியாக இருந்து பின்னர் மனைவியாக மாறிய ஒரு பெண்ணும் அவருடைய மற்றொரு தோழியும் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிப்பு மற்றும் பணி ஆளுமை திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு வகையான பயிற்சிகள் (கவுன்சிலிங்) அளிப்பதாக பெற்றோர்களிடம் வாக்குறுதி அளித்து, பல மாணவிகளை பயிற்சி முகாம்களுக்காக அந்த டாக்டர் குழுவினர் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

சந்திரபூர், பண்டாரா மற்றும் கோண்டியா உள்பட விதர்ப்பாவின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் முகாம் நடத்தி உள்ளனர். பெரும்பாலும் மாணவர்களை விட மாணவிகளையே அதிக அளவில் அனைத்துஇந்த பயிற்சியை அவர் கொடுத்திருக்கிறார். அவருடன் ஒத்துழைக்கும் சில பெற்றோர்களை டாக்டர் தங்களது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி முக்கியத்துவம் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மாணவிகளை வசியம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட மருந்தை டாக்டர் உட்கொள்ள மைதா அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. பல இடங்களுக்கு மாணவிகளை உல்லாச பயணமாகவும் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் அவர் கொண்டு இருந்தார். முதலில் அவர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் அவர் பின்னர் அதை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த கொடூர செயலை அந்த டாக்டர் செய்து வந்தது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அவரிடம் கவுன்சிலிங் பெற்ற 27 வயதான முன்னாள் மாணவி ஒருவர்தான் இந்த சம்பவத்தை இப்போது அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் அவரை மிரட்டி தொடர்ந்து தனது இச்சைகளுக்கு பணிய வைத்து வந்து இருக்கிறார். ஒத்துழைக்காவிட்டால் அவருடைய கணவரிடம் உண்மையை சொல்லி விடுவேன் என்றும் அச்சுறுத்தி இருக்கிறார்.

அவர்கள் பிடியிலிருந்து தப்பித்த அந்த பெண், தனது கணவருடன் ஹட்கேஸ்வர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் உஷார் ஆனார்கள். அவர்களுடைய துரித நடவடிக்கையால் மேலும் சில பாதிக்கப்பட்ட பெண்களையும் கண்டுபிடித்து புகார் செய்ய வைத்தனர். அவர்களில் பலர் திருமணம் ஆனவர்கள். பல மாணவிகள் குடும்ப கவுரவம் கருதி இதை வெளியில் சொல்லாமலேயே இருந்து வந்ததுதான் எந்த வித தடையும் இன்றி அந்த டாக்டர் தனது லீலைகளை தொடர்வதற்கு வசதியாக அமைந்து விட்டது.

போலீசார் இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மேலும் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

MUST READ