spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

 

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

we-r-hiring

ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்

ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(20).  கடந்த ஓராண்டுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியன் 2வில் ஏ.ஆர். ரகுமானின் இசை இடம்பெறும்…… இயக்குனர் சங்கர் அறிவிப்பு!

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், கருத்து வேறுபாடால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, பிரியா பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ், நேற்று வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

MUST READ