அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரனுக்கு சிறைக்குள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் புழல் தண்டனை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஞானசேகரனுக்கு நேற்று நள்ளிரவில் வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர்கள் அவரை சிகிச்சைக்காக இன்று அதிகாலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசு ஸ்டான்லி மருத்துவமனை தகவலின் பேரில் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஞானசேகரனுக்கு 4 முறை வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது 5 ஆவது முறையாக வந்துள்ளாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
