Homeசெய்திகள்க்ரைம்"மாவு வேணும்"னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில்...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, நகைக்காக 55 வயது பெண்ணைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது."மாவு வேணும்"னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

பழவேற்காடு பழைய பேருந்து நிலையம் அருகே வசித்து வந்தவர்கள் ராதாகிருஷ்ணன் – வனஜா (55) தம்பதியர். இவர்களது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். ராதாகிருஷ்ணன் வீட்டின் அருகிலேயே மளிகைக் கடை நடத்தி வர, வனஜா வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இன்று காலை, வழக்கம் போல் மளிகைக் கடையில் இருந்த தனது கணவருக்கு வனஜா தேநீர் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர் மதிய உணவிற்காகப் பிற்பகல் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வனஜா கழுத்தில் கத்திக்குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

we-r-hiring

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், முதிய தம்பதியர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல், இட்லி மாவு வாங்குவது போல நடித்து வீட்டிற்குள் புகுந்துள்ளது. தொடர்ந்து வனஜாவை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சரடு மற்றும் காதில் இருந்த தங்கக் கம்மல் உள்ளிட்ட 15 சவரன் நகைகளைப் பறித்துள்ளது. அப்போது வனஜா சத்தம் போட முயன்றதால், அவரது கழுத்தில் கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வனஜாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பாலைவனம் போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொலைக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

MUST READ