Homeசெய்திகள்க்ரைம்லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

-

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

லாட்டரியில் பரிசு வந்துள்ளதாக கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து அவர்கள் மூலம் போதை பொருட்களை கடத்தும் கும்பல் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாக இருக்கிறது.

 

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

போதைப் பொருட்களை நாடு விட்டு நாடு கடத்த சர்வதேச கடத்தல் கும்பல் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அதில் சமீபத்திய இணைப்பு தான் லாட்டரி.

லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகவும் அதனை கம்போடியாவுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு ராஜஸ்தானை சேர்ந்த கிரீஸ் என்பவருக்கு தகவல் வந்துள்ளது. இதற்காக இலவச விமான டிக்கெட்களும் வழங்கப்பட்டுள்ளன.

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

 

இதை எடுத்து கம்போடியா சென்ற அவரிடம் சில ஆயிரம் ரூபாய் லாட்டரி பரிசுத் தொகையாக தரப்பட்டுள்ளது. பின்னர் நாடு திரும்பும் முன் இந்தியாவில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பார்சல் ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தரை இறங்கிய போது அவரது உடைமைகளை சோதனை இட்ட புலனாய்வு அதிகாரிகள் பார்சலில் 3.5 கிலோ கோக்கைன் போதைப் பொருள் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். லாட்டரிக்கு ஆசைப்பட்ட கிரீஸ் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் சமீபத்திய லாட்டரி தூண்டிலில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

MUST READ