spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

-

- Advertisement -

13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவியால்  தாய், மணமகன், இடைத்தரகர், புரோகிதர்  கைது செய்யப்பட்டனா்.13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம்  நந்திகமவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது கணவர் இறந்த பிறகு, அவர் தினசரி கூலி வேலைக்கு சென்று குழந்தைகளைப் பராமரித்து வருகிறார். அவரது மகள் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார். குடும்ப பராமரிப்பு  சுமையாக மாறியதால், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு புரோக்கரை அணுகினார். புரோக்கரும் ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலம், கண்டிவாடாவைச் சேர்ந்த 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுட்டிற்கு  நல்ல சொத்து இருப்பதாகக் கூறினார்.

இதற்கு  மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரும் ஒப்புக்கொண்டார்.  இதனால் மே 28 அன்று, அந்தப் பெண்ணை ஸ்ரீனிவாஸ் உடன்  திருமணம் செய்து வைத்தார். இருப்பினும், அந்தப் பெண்ணுக்கு இந்தத் திருமணத்தை விரும்பவில்லை.  தான் படிக்க வேண்டும் என்று கூறியதால், அந்த பெண்ணை அவர் படித்த பள்ளிக்கு கடந்த வாரம் முதல் அனுப்பினர்.13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!இந்நிலையில் படிப்பதாகச் சென்று, தனது தாயார் தனது விருப்பத்திற்கு மாறாக சொத்து இருப்பதால், தன்னை திருமணம் செய்து வைத்துவிட்டதாக   பள்ளி ஆசிரியர்களிடம் சொன்னாள். ஆசிரியர்கள் உடனடியாக நந்திகாமா தாசில்தாரிடம் அழைத்து சென்று இந்த விஷயத்தைப் பற்றி அவருக்குத் தெரிவித்தனர். தாசில்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சிறுமியின் புகாரின் அடிப்படையில், அவரது தாய் மற்றும் மணமகன் ஸ்ரீநிவாச் கவுட், புரோக்கர் மற்றும் திருமணத்தை நடத்திய புரோகிதர் மீது குழந்தை திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

we-r-hiring

ஸ்ரீனிவாஸ் கவுட் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்தப் பெண்ணுடன் இருக்கிறார். அந்தப் பெண்ணுடன் அவருக்கு பாலியல் உறவு இருப்பது கண்டறியப்பட்டால், ஸ்ரீனிவாஸ் கவுட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் மைனருடன் பாலியல் உறவு தண்டனைக்குரியது. மாநில அரசு இந்த நடைமுறையை நிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும், மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்வது இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தகராறு – திருநங்கை மீது தம்பியே அரிவாள் வெட்டு!

MUST READ