சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்
ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வராசு (68) தாம்பரத்தில் இருந்து பேருந்து மூலம் ராஜா அண்ணாமலைபுரம் வந்த இவர் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது மெயின் ரோடு பஸ் ஸ்டாப் அருகில் இறங்கி அருகில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு நடந்து வந்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த சுமார் 6 அடி உயரமுள்ள நபர் ஒருவர் செல்வராசுவை இங்கே வாடா என அழைத்து நான் சிஐடி போலீஸ் எனக்கூறி கழுத்தில் நகை இருக்கிறதா யாரேனும் பாரித்துக் கொண்டு சென்றால் என்ன செய்வாய் உடனே உனது நகையை மறைத்து வை என மிரட்டி உள்ளார்.
இதனை கேட்டு பயந்த செல்வராசு கழுத்தில் இருந்த நகையை அவிழ்த்து தனது பாக்கெட்டில் வைத்தார். சிஐடி போலீஸ் உனது நகை கீழே கிடக்கிறது பார் என கூறியதில் செல்வராசு கீழே தேடிய போது அவரை திசை திருப்பி அவரது பாக்கெட்டில் இருந்த நகையை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பாக்கெட்டில் வைத்த நகை காணவில்லை என உணர்ந்த செல்வராசு அருகே உள்ள அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரியின் அடிப்படையில் போலீசார் BNS 303(2), 319(2) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.