பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாதிரியாரை கைது செய்ய நாகர்கோவில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் தலைமறையாக இருந்து வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வந்தனர். அவரது செல்போன் தொடர்புகளை அவர்கள் கண்காணிக்க வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் இன்று அவரது செல்போன் தொடர்பு இருந்ததை தொடர்ந்து அவரை தனிப்படைப்பு போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.