Homeசெய்திகள்க்ரைம்மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

-

தாம்பரம் மாடம்பாக்கத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ சடலம். கார் ஏற்றி கொலையா என போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணையில், நில பிரச்சனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்து.

சென்னை மாடம்பாக்கம் அரவிந்த் நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(76) ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ, இவர் மனைவி சாந்தா(74). இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவானத்தை பூர்விகமாக கொண்ட கிருஷ்ணமூர்த்தி அதே திண்டிவானம் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து ஓய்வு பெற்றார்.

இவருக்கு மகன், மகள் உள்ள நிலையில் இருவரும் தனி தனி குடும்பமாக லண்டனில் தங்கி அங்கேயே பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி 15.04.2023 அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்வதாக மனைவி சாந்தாவிடம் கூறிவிட்டு சென்றார்.

 மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

வீட்டின் அருகே மாடம்பாக்கம் குமாரசாமி நகர், திருமலை நகர் சந்திப்பு பகுதியில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இந்த தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் பிரேதத்தை மீட்டனர். எந்த வாகனம் மோதியது ? அந்த வாகனம் நிர்காமல் சென்ற காரணம் என்ன? வாகனத்தை ஏற்றி கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போக்குவரத்து போலீசார் விசாரணையை துவங்கினார்கள்,

இதனால் அருகில் இருந்த ஐந்து அடுக்கு மாடி கட்டத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்த போதும் அவ்வழியே கார் எதுவும் செல்ல வில்லை. ஆனால் அந்த சிசிடிவி காட்சியில் அதே கட்டிடத்தில் மாடியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி விழுந்த காட்சிகள் பதிவா இருந்தது.

 மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார்
வாகன விபத்து இல்லை என்பதை அறிந்த நிலையில் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த சேலையூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி அந்த கட்டிடத்தில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சாலையில் நடந்து சென்ற கிருஷ்ணமூர்த்தி காவளாளி அசந்த நேரம் பார்த்து கேட்டை திறந்து ஐந்து அடுக்கு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றதும் தெரிய வந்தது.

இதனால், கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மரணத்திற்கு காரணம் என்ன என்கிற கோணத்தில் அவரின் மனைவி சாந்தாவிடம் விசாரணை செய்தபோது அவர்களுக்கு திண்டிவனம் அருகே 35 செண்ட் இடம் உள்ளது என்றும் அதனை அங்குள்ளவர்கள் அபகரிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார்.

 மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

இதே காரண்திற்காக கடந்த ஆறு மாதங்கள் முன்பாக அங்குள்ள மின்சார டிரண்பார்மரில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பிரேத பரிசோதனை முடிவு மற்றும் உறவினர்களிடம் விசாரணையை தொடரவுள்ளனர்.

சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ வழக்கில் அடுத்து அடுத்து பரபரப்பாக விசாரணை சென்றதும் சிசிடிவி காட்சிகள் வெளியானது போக்குவரத்து புலனாய்வு போலீசார், சேலையூர் சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் அப்பகுதியினரை பரபரப்படைந்தனர்.

MUST READ