Homeசெய்திகள்க்ரைம்சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை – மகன் கைது; ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு!

சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை – மகன் கைது; ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு!

-

- Advertisement -

ரிஷிவந்தியம் அருகே சொத்து தகராறு காரணமாகத் தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை – மகன் கைது; ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்.

இவருக்கும் இவரது மகன் கலைமணிக்கும் இடையே சொத்து தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கலைமணி கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை கலைமணி வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த குப்பன், சொத்து தகராறு தொடர்பாக மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கலைமணி, அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தை குப்பனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தந்தையைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் கலைமணியைக் கைது செய்தனர்.

மேலும், உயிரிழந்த குப்பனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் வங்கிகளை குறிவைத்து தொடர் மோசடி – தூத்துக்குடியில் பதுங்கியிருந்த 4 பேர் கைது!

MUST READ