பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு, ரூ.15 ஆயிரம் பணம் பறித்ததாகப் பதிவான வழக்கில் தமிழக வெற்றிக் கழகப் பிரமுகர் பாபு உள்ளிட்ட மூன்று பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மிரட்டல் விடுக்கப் பயன்படுத்திய கார், கத்திகள் பறிமுதல்:
இந்த வழக்கில் தவெக பிரமுகர் பாபு மற்றும் ரவுடிகளான நேதாஜி, மணிகண்டன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு கார் மற்றும் இரண்டு கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆளும் கட்சி நிர்வாகியைக் கொலை செய்ய சதித்திட்டம்?
மீஞ்சூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில் தவெக பிரமுகர்:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக பிரமுகர் பாபு, தனது கூட்டாளிகளான சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுடன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பெற்று ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது பெண் புகார்!
