Homeசெய்திகள்க்ரைம்கன்னியாகுமரியில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை!

கன்னியாகுமரியில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை!

-

- Advertisement -

கன்னியாகுமரியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஆசிரியை ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அலங்கார மாதா திருத்தலம் அருகே வசித்து வருபவர் சோனியா (40). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பென்சியஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சோனியா தினமும் காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் செல்வதும், மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம். அதன்படி, கடந்த நவம்பர் 18-ஆம் தேதி காலையில் வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றார்.

மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சோனியா அளித்த புகாரின் பேரில், கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளைக் கைப்பற்றி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு!

MUST READ