Homeசெய்திகள்க்ரைம்மலேசியாவுக்கு ஹவாலா பணம், உயர்ரக கஞ்சா கடத்த முயற்சி – 5 பேரை கைது செய்த...

மலேசியாவுக்கு ஹவாலா பணம், உயர்ரக கஞ்சா கடத்த முயற்சி – 5 பேரை கைது செய்த எண்ணூர் தனிப்படை போலீசார்!

-

- Advertisement -

மலேசியாவுக்கு ஹவாலா பணம் மற்றும் உயர்ரக கஞ்சாவைக் கடத்த முயன்றதாக 5 பேரை எண்ணூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.6.42 லட்சம் ஹவாலா பணம், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான இங்கிலாந்து கரன்சி மற்றும் உயர்ரக கஞ்சா ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மலேசியாவுக்கு ஹவாலா பணம், உயர்ரக கஞ்சா கடத்த முயற்சி – 5 பேரை கைது செய்த எண்ணூர் தனிப்படை போலீசார்!

காரில் ஹவாலா பணம் மற்றும் உயர்ரக கஞ்சாவை மலேசியாவுக்குக் கடத்திச் செல்வதாக எண்ணூர் காவல் ஆய்வாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், செங்குன்றம் அலமாதி பகுதியில் போலீசார் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, காரில் போலீசார் சோதனை செய்தபோது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரையும் கைது செய்து எண்ணூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆஷிக் அலி (29), அபுபக்கர் சித்திக் (21), உசாமா (24), திருச்சியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (19), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் ஷேக் அப்துல்லா காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பெங்களூரு விமான நிலையம் வழியாக மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்த ரூ.6.42 லட்சம் ஹவாலா பணம், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான இங்கிலாந்து கரன்சி மற்றும் உயர்ரக கஞ்சா ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறை ஊழியர் கைது – 313 கிராம் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

MUST READ