- Advertisement -
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் 9 பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பள்ளித் தலைமையாசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் திருவிக்ரமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைமையாசிரியர் திருவிக்ரமன் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளிச் சிறுமிகளிடம் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் சீண்டல் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
