Homeசெய்திகள்க்ரைம்ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தல் – திருத்தணியைச் சேர்ந்த 3 இளைஞர்கள்...

ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தல் – திருத்தணியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு!

-

- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதாக, திருத்தணி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு 22 கிலோ கஞ்சா கடத்தல் – திருத்தணியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு!

ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர். அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனைக்காகக் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருத்தணி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (27), சந்திரன் (24), ஆனந்த் பாபு (22) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

அமரர் ஊர்தியில் வந்து 3 நிமிடத்தில் ஏடிஎம் கொள்ளை!  முக்கியக் குற்றவாளியை கிருஷ்ணகிரியில் கைது செய்த ஆவடி தனிப்படை  

MUST READ