Homeசெய்திகள்க்ரைம்தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு – பிரியாணி கடை...

தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு – பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது!

-

- Advertisement -

சென்னை தாம்பரம் அருகே பிரியாணி செய்யுமிடம் மற்றும் கடையில் வைத்து, மாஸ்டரின் 12 வயது மகளுக்குக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பிரியாணி கடை உரிமையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
​சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (56). இவர் அதே பகுதியில் பிரியாணி தயாரிக்கும் சமையல் குடோன் (Kitchen) ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் அருகிலேயே பிரியாணி கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

போக்சோ

we-r-hiring

​இவரது பிரியாணி சமையல் குடோனில் மாஸ்டராக வேலை பார்க்கும் ஒருவர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது 12 வயது மகளைத் தன்னுடன் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் முகமது யூசுப், கடந்த நான்கு மாதங்களாக அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தனது தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கம்போல் சிறுமி தனது தந்தையுடன் பிரியாணி சமையல் குடோனுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். தந்தை இல்லாத அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முகமது யூசுப் சிறுமியிடம் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாகச் சிறுமியின் தந்தை திடீரென உள்ளே வந்துள்ளார். தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

​புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ