சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் ரவுடி கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த வழக்கில் இருவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் மயில்வேல் ( வயது 51).இவர் சமையல் மாஸ்டர் ஆவார். இவர் கடந்த 7ம் தேதியன்று மயில்வேல் சத்தரை பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி பலியானார்.
இதை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் கடந்த எட்டாம் தேதி அன்று நரசிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி முகிந்தர் அமர்நாத் என்கின்ற முகிந்தர் தனது அப்பா (சித்தப்பா )இறந்து விட்டதால் கஞ்சா போதையில் அவருடைய கூட்டாளிகள் வினோத் குமார் என்கின்ற பாபா, பிரவீன் அபிமன்யூ 4 பேரும் சேர்ந்து நரசிங்கபுரம் அடுத்த மாரி மங்கலம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் அதன் பெண் உரிமையாளரிடம் தன்னுடைய சித்தப்பா இறந்து விட்டதால் கடையை அடைக்க கோரியும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் 1000 ரூபாய் மாமூல் வசூலித்தது மட்டுமின்றி கடையின் ஒரு பகுதியில் கத்தியை கொண்டு அடித்து துவம்சம் செய்தும் மிரட்டி சென்றனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அன்று மாலை 5 மணியளவில் தக்கோலம் மெயின் சாலையில் உள்ள அனைத்து கடைகளிலும் கத்தியை கொண்டு கடையை அடைக்க கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கடையை அடைக்காததை கண்ட அவர்கள் மீண்டும் இரவு 9 மணியளவில் தக்கோலம் மெயின் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் சென்று கடையை அடைக்க கோரி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அப்போது நரசிங்கபுரம் பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்த நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் தெற்கு தொகுதி தலைவர் வினோத்குமார் என்பவரையும் தன் சித்தப்பா இறந்து விட்டதால் கறி கடையை அடைக்க கோரி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வினோத்குமார் கடையை மூட மறுத்துள்ளார். அப்போது முகிந்தர் கூட்டாளிகள் 5 பேரும் கறிக்கடை உரிமையாளரான வினோத்குமாரை தகாத வார்த்தையால் பேசி அவரை தாக்கியுள்ளனர். அப்போது முகிந்தர் கூட்டாளியான ரவுடி வினோத்குமார் என்ற பாபா வினோத் குமாரின் இடது பக்க கையில் வெட்டிவிட்டு கொலை செய்து விடுவதாக மூவரும் மிரட்டி விட்டு தப்பிச் அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் அதே நாளன்று இரவு 9:20 மணியளவில் பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள தாபாவிற்கு சென்ற அவர்கள்ரொட்டி சிக்கன் கிரேவி, எக் கிமா ஆம்லெட் ,கலக்கி உள்ளிட்ட பொருள்களை பார்சல் கட்ட கோரி வாங்கி விட்டு அதற்கான பில் 840 ரூபாய் தாபா உரிமையாளரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினரான சுதன் ராஜ் கேட்டபோது பணம் தர மறுத்த அவர்கள் தாபா வில் உள்ள பொருட்களை கத்தியால் சூறையாடி சுதன் ராஜை தாக்கி பாபா என்ற வினோத் சுதன் ராஜியின் இடது கையில் வெட்டி அங்கிருந்து 4 பேரும் தப்பியுள்ளனர்
இதில் காயமடைந்த சுதன் ராஜ் வினோத் குமார் இருவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேர்த்தனர். தாபா கடை உரிமையாளர் சுதன்ராஜ் இடது கையில் 10 தையல்கள் போடப்பட்டும், சிக்கன் கடை உரிமையாளர் வினோத்குமாருக்கு இடது கை 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினார்கள்.
நடந்த சம்பவம் குறித்து வினோத்குமார் மற்றும் சுதன் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மப்பேடு போலீசார், இது சம்பந்தமாக முகிந்தர் அமர்நாத் என்கின்ற முகிந்தர், வினோத்குமார் என்கின்ற பாபா, பிரவீன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர். அதில் பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக உள்ள முகிந்தர் என்ற அமர்நாத் சரித்திர பதிவேடு ரவுடியாக இருந்து வருகிறார். அவர் மீது ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை என மூன்று வழக்குகள் அவர் மீது இருந்து வருகிறது. வினோத்குமார் என்ற பாபா மீதும் அடிதடி வழக்குகள் இரண்டு இருந்து வருகிறது.
இதில் மாரிமங்கலம் பேக்கரி கடையில் பெண் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மாமுல் ஒசூலித்த சரித்திர பதிவேடு முகிந்தர், பாபா என்ற வினோத் குமார், அபிமன்யூ மூவர் மீது பேக்கரி கடை உரிமையாளர் லட்சுமியின் கணவர் சண்முகம் என்பவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் எனது அளித்திருந்தார்.
அந்த புகாரை பெற்ற சுங்குவார்சத்திரம் போலீசார் பாபா என்ற வினோத் மற்றும் அபிமன்யு இருவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர்கள் தடுக்கி விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் குற்ற எண் 868/2023 u/s. 294(b),392, 394, 506(ii) IPC வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடி முகிந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.
உறவினர் இறந்ததற்கு கடையை அடைக்கக்கோரி கடை உரிமையாளர்களை கத்தியை கொண்டு வெட்டியும், மிரட்டி மாமூல் வசூலித்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.