spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

-

- Advertisement -

வேலூர் காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது இளைஞரை கைது செய்து அவனிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

we-r-hiring

காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து தொடர் புகார்களின் அடிப்படையில் காட்பாடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனி அறிவுறுத்தலில் பேரில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் (16:12:2023) இன்று காட்பாடி குடியாத்தம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருடியது தெரியவந்தது.

காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

உடனே அந்த நபரை  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட தொடர்  விசாரணையில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறார் என்பதும் இவர் காட்பாடி, குடியாத்தம் சாலை, உழவர் சந்தை, வள்ளிமலை கூட்டு ரோடு, செங்குட்டை, காட்பாடி இரயில் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது

இதனை அடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10 இருச்சக்கர வாகனத்தை கையகப்படுத்தபட்டு போலிசார் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

MUST READ