எலெக்ட்ரிக் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த மின் ஓயர்களை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் பல்லடம் பணப்பாளையத்தில் எலெக்ட்ரிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் கடைக்குச் சென்ற ரத்தினசாமி கடையின் மேற்கூரை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்பொழுது, கடையில் இருந்த பொருட்களை பார்த்தபோது 50,000 ரூபாய் மதிப்பிலான மின் ஓயர்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் ரத்தினசாமி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றCCTV camera னர்.