Homeசெய்திகள்க்ரைம்சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்

-

- Advertisement -

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது  சாலையை கடக்க முயன்ற பெண்கள் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டு இழந்து சாலையை கடந்த முயன்ற இருவர் மீதும், சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

we-r-hiring

இதில், 2 பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், 6 வயது சிறுமி உள்ளிட்ட 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ