விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். பெரியசாமி நிலம் வாங்குவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கில் இருந்து கடந்த நவம்பர் 6-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். பெரியசாமி தைலாகுளத்தில் உள்ள வீட்டின் முன் பைக்கை நிறுத்திய போது, பின்தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரூ.7.5 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனர்.
கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது
அதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து எஸ்.பி கண்ணன் உத்தரவில் டி.எஸ்.பி ராஜா மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் ஆந்திர விரைந்து நெல்லூர் மாவட்டம் போகுல மண்டலத்தை சேர்ந்த நாகராஜ்(53), சித்தூர் மாவட்டம் நகரியை சேர்ந்த வெங்கடேஷ்(30) ஆகிய இருவரை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வந்து விசாரணை செய்து. அவர்களிடம் இருந்து ரூ.7.5 லட்சம் போலீசார் மீட்டனர் பின்னர் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.