spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை...

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

-

- Advertisement -

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

we-r-hiring

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பெருந்தல் மன்னா என்ற ஊரில் எம்.கே. ஜுவல்லரி என்ற கடை உரிமையாளர் கடையை அடைத்து விட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தம்பியுடன் 3 .1/2 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் அருகே முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடித்து தப்பிச்செல்லும் சிசிடிவி வீடியோவை வைத்து தேடி வந்தனர்.  நான்கு பேர் காரில் திருச்சூரை நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த காரில் வரும் கும்பலை தடுத்து நிறுத்த பிடிக்க முயற்சி செய்தபோது கொள்ளையர்கள் காரில் தப்பியுள்ளனர். போலீசார் துரத்திச் சென்று காரை மடக்கி கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

பிடிபட்ட கொள்ளையர்களிடம் தங்க நகைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஐந்து பேரை பிடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தப்பியோடிய ஐந்து கொள்ளையர்களிடம் இருக்கும் என்பதால் அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கொள்ளை போன மூன்று கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்துள்ளது . தற்போது பிடிபட்டுள்ள கொள்ளையர்களில் நான்கு பேர் கண்ணூரை சேர்ந்த பிரவீன் லால் ,லிஜின் ராஜன் ,மற்றும் திருச்சூர் சேர்ந்த சதீசன் நிகில் , இதில் பிரவீன் லால் என்பவன் ஏற்கனவே பல நகைக்கடை கொள்ளையில் கைது செய்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

நகைக் கடை உரிமையாளரின் வீட்டிற்கு அருகில் வைத்து முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஐந்து பேரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

MUST READ