spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் சம்பவம்... பின்னணி என்ன?

விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் சம்பவம்… பின்னணி என்ன?

-

- Advertisement -

விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு அடித்து கொண்ட பெண்கள்… அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
காஜுவாக்காவில் நடக்கும் தொடர் சம்பவம்... பின்னணி என்ன?ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் சாலையோரம் கடை வைப்பது தொடர்பாக இரு வியாபாரிகள் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் பெண்கள் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்து நடைபாதையில் அடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் உறவினர்கள் இருவம் கூட அடித்து கொண்டனர்.

காஜுவாக்காவில் நடக்கும் தொடர் சம்பவம்... பின்னணி என்ன?
அங்கிருந்த சிலர் அவர்களை தடுக்க முயன்றும் அவர்கள் கேட்கவில்லை. இந்த காட்சியை அங்கிருந்த பொது மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

we-r-hiring

அதே போல விசாகப்பட்டினம் கஜுவாகா பகுதியில் உள்ள பெடகன்ட்யாடா பாலசெருவு அருகே வியாழன் அன்று இளம் பெண்ணை மேக்னா என்பவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சர்மா என்பவர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காஜுவாக்காவில் நடக்கும் தொடர் சம்பவம்... பின்னணி என்ன?அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மேக்னா டோங்காடா அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தலையில் 30 தையல்கள் போடப்பட்டுள்ளன. நீரஜ் சர்மா அந்த பெண்ணை  பல மாதங்களாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மேக்னாவின் தந்தை கூறியதாவது: கடந்த 8 மாதங்களாக நீரஜ் ஆபாச வீடியோக்களை மேக்னாவின் குடும்பத்தாருக்கு அனுப்பி வருவதாfவும் மற்றும் செயற்கை நுண்ணறிவு  (AI Morphed) வீடியோக்களை மேக்னாவின் உறவினர்களுக்கு அனுப்பி அவரது குடும்பத்தை துன்புறுத்தி வந்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து, அவருக்கு எதிராக இரண்டு புகார்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதில் ஒன்று சைபர் கிரைம் நிலையத்திலும் மற்றொன்று உள்ளூர் காவல் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை, வீடியோவை வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பு – நபர் கைது

 

MUST READ