‘லூட்டேரி துல்ஹான்’ என்கிற ஒரு பெண், 3 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்து, அவர்களை விவாகரத்து செய்து செட்டில்மெண்டாக மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்து ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கி என்கிற சீமா கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்து கொண்டார். சிறிது நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த சீமா தனது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக புகார் செய்தார். பிறகு சமரச தொகையாக ரூ.75 லட்சத்தை பெற்றுக் கொண்டு கணவரை பிரிந்து சென்றார்.

2017-ம் ஆண்டு குருகிராமில் உள்ள சாப்ட்வேர் ஊழியரை திருமணம் செய்து கொண்டு, அவரிடமிருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிரிந்தார்.
2023 ஆம் ஆண்டில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார். அவரிடம் இருந்து ரூ. 36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் மூன்று குடும்பத்தினருக்கும் தெரிய வந்து சீமா இதையே வேலையாக கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து அவர்கள் ஒன்று சேர்ந்துர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சீமாவை கைது செய்தனர்.
பொதுவாக, பெண்கள் பல திருமணங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவே ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் சீமா, தன்னைப்போன்ற பெண்களும் பல திருமணங்களை செய்து இப்படியும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார்.
விசாரணையின் போது, சீமா போலீஸாரிடம், திருமண தளங்களில் தான் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதாகவும், விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அதை நம்பி இந்த மூன்று கணவன்களும் சீமாவிடம் ஏமாந்துள்ளனர்.
வெவ்வேறு மாநிலங்களில் திருமணம் செய்துகொண்டு, ‘கணவர்களிடம்’ செட்டில்மென்டாக மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்.


