spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இன்ஸ்டாவில் பதிவிட்டு பெண் தற்கொலை - காதல் பிரச்சனையா? போலீஸ் விசாரணை

இன்ஸ்டாவில் பதிவிட்டு பெண் தற்கொலை – காதல் பிரச்சனையா? போலீஸ் விசாரணை

-

- Advertisement -

காதல் பிரச்சனையில் இன்ஸ்டாவில் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் குளோரியா, இவர் மேற்க்கு தாம்பரத்தில் உள்ள ( ஜெயச்சந்திரன் ) பிரபல துணி கடையில் வேலை பார்த்து வந்தார்,

we-r-hiring

இந்த நிலையில் குளோரியா (24) அதே துணி கடையில் வேலை பார்த்து வரும் செஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருவரும் தாம்பரம் ரங்கநாதபுரம் ஐந்தாவது தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து லிவிங் டு கிதெராக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது காதலருடன் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் குளோரியா, அதன் பின்னர் அவரைப் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

இந்தநிலையில் நேற்று இரவு குளோரியா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், குளோரியா உடல் முழுவதும் அழுகிய நிலையில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் சோதனை செய்த போது குளோரியா எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் குளோரியாவின் ஆண் நண்பரை தேடி வருகின்றனர்.

குளோரியா கான பாடல்களை பாடுபவராகவும், ரீல்ஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டிவந்தது தெரியவந்துள்ளது.பல ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ் செய்தும் பாடல்கள் பாடியும் இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு வந்த நிலையில் புது புது பாடல்களுக்கும் பெண், ஆண் நண்பர்களுடன் பழகியும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் தாம்பரத்தில் பிரபல தனியார் துணிக்கடையில் பணி செய்தபோது இளைஞருடன் காதல் ஏற்பட்டு அதே தாம்பரம் ரங்கநாதபுரத்தில் 3500 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து சில நாட்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த இளைஞர் சொந்தவூர் செஞ்சிக்கு சென்றதகவும் அவரை தேடி சென்ற குளோரியாவை இளைஞரின் உறவினர்கள் வயது வித்தியாசம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்புப் தெரிவித்தாக கூறப்படுகிறது,

இதனால் மன வேதனை அடைந்த குளோரியா வழக்கமாக ரீல்ஸ் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் ஐ.டியில் தற்கொலை செய்து கொள்ளபோவதாக வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குளோரியாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் சகோதருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

MUST READ