Homeசெய்திகள்மாவட்டம்பென்னிகுவிக் பிறந்தநாள் விழா: சின்னமனூரில் 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற பிரம்மாண்ட எல்கைப்...

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா: சின்னமனூரில் 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற பிரம்மாண்ட எல்கைப் பந்தயம்!

-

- Advertisement -

தேனி மாவட்டம் சின்னமனூரில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பென்னிகுவிக் பிறந்தநாள் விழா: சின்னமனூரில் 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற பிரம்மாண்ட எல்கைப் பந்தயம்!

தேனி மாவட்ட ரேக்ளா ரேஸ் நண்பர்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற போட்டி!

சின்னமூரில் இருந்து மேகமலை அடிவாரம் வரை மாநில நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது வண்டிகளுடன் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள் – உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள்!

போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் சீறிப்பாய்ந்தன. மாடுகளின் வேகத்தையும், சாரதிகளின் திறமையையும் கண்டு ரசித்த சாலையோரப் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்தப் பந்தயத்தை நேரில் கண்டுகளித்தனர்.

7 பிரிவுகளில் போட்டி – வெற்றியாளர்களுக்குப் பரிசு!

தேன்சிட்டு, தட்டான்சிட்டு, இளஞ்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விழா!

போட்டி நடைபெற்ற பகுதிகளில் உத்தமபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஓடைப்பட்டி காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட ரேக்ளா ரேஸ் நண்பர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வீல்சேர் மாரத்தான் – 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

MUST READ