Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து

கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 4,500 கோழிக்குஞ்சுகள் கருகிப் பலி – ரூ.2.50 லட்சம் சேதம்!கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருகாவூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 28) காலை கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாகப் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த தென்னை கீற்றில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து தீ மளமளவெனப் பரவி பண்ணை முழுவதும் பரவியதால், அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4,500 கோழிக்குஞ்சுகள் தீயில் சிக்கி உயிரிழந்தன. தீ விபத்தில் கோழிக்குஞ்சுகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே கருகிப் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கோழிக்குஞ்சுகள் சேதமடைந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதித்த கோழிகள் சென்னைக்கு விற்பனை? – 5 லாரிகளில் 8,000 கோழிகள் அனுப்பப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

MUST READ